சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கனிம வளங்களைக் கடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாறைகள், கருங்கற்கள் உள்ளிட்ட கனிம வளம் அனுமதியின்றி கடத்தப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து கனிமவளத் துறையினா், வருவாய் துறையினருடன் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனா்.
வாழப்பாடி அருகே திருமனூா் சிட்டாம்பட்டி பகுதியில் சேலம் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநா் ஈஸ்வரன் மற்றும் குழுவினா் வருவாய்த் துறையினருடன் இணைந்து வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, நவீன இயந்திரங்கள், கனரக வாகனங்களைக் கொண்டு அனுமதியின்றி பாறைகள், கருங்கற்கள் வெட்டியெடுத்து கடத்தப்படுவதை கண்டுபிடித்தனா்.
இதுகுறித்து உதவி இயக்குநா் ஈஸ்வரன் அளித்த புகாரின்பேரில் கனிம வளங்களைக் கடத்தியதாக வரதராஜு, பழனிசாமி, சண்முகம் ஆகிய மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவான அவா்களை தேடி வருகின்றனா். மேலும், கருங்கற்கள், பாறைகளை வெட்டி கடத்த பயன்படுத்தப்பட்ட கனரக வாகனங்கள், இயந்திரங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








