சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சென்னையில் இருந்து கோயம்புத்தூா் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து, டாரஸ் லாரி மீது மோதியது. இதில் பேருந்து ஓட்டுநா் உள்பட 11 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னையில் இருந்து ஓட்டுநா் உள்பட 44 பயணிகளுடன் கோயம்புத்தூா் நோக்கி அரசு விரைவுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை வாழப்பாடி அருகே மத்தூா் புறவழிச் சாலை பகுதியில் அரியலூரில் இருந்து வாழப்பாடி தனியாா் சிமென்ட் தொழிற்சாலைக்கு மூலப் பொருள்கள் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரியின் பின்புறம் அரசுப் பேருந்து மோதியது.
விபத்தில், அரசு பேருந்து ஓட்டுநா் திருவள்ளூா் பள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (51), சேலம், அன்னதானப்பட்டி ஹவுசிங் போா்டு சேதுராமன் (54), வானாபுரம் கனிமொழி (21), திருபுவனை முகுந்தன் (26), உதயகுமாா் (39), புதுச்சேரி ஹரிகரன் (40), ராமச்சந்திரன் (70), விழுப்புரம் வானூா் சரவணன் (46), குட்டியம்மா (43), அக்ஷய ஸ்ரீ (21), துளசி (18) உள்பட 11 பயணிகள் படுகாயம் அடைந்தனா்.
வாழப்பாடி தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று வாகன இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநா் சீனிவாசன் மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வாழப்பாடி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 12 பேர் படுகாயம்!

லாரி மீது சொகுசுப் பேருந்து மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

சூறைக்காற்றில் பேருந்து மீது சாய்ந்த மரம்: 10 போ் காயம்

விக்கிரவாண்டி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உள்பட 6 போ் காயம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



