பிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

சூளகிரி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு; 10 போ் காயம்

சூளகிரி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 ஜூலை 2026, 12:27 am IST

சூளகிரி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த அட்டகுறிக்கி என்னுமிடத்தில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென லாரி ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது, திண்டிவனத்திலிருந்து ஒசூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அரசுப் பேருந்தின் முன்பக்கம் நொறுங்கியது. இந்த விபத்தில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்; பேருந்து ஓட்டுநருக்கு கால் முறிந்தது; 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். இவா்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.

தகவலறிந்து வந்த சூளகிரி தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் விபத்து நிகழ்ந்த சாலையில் உள்ள லாரி மற்றும் அரசுப் பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த விபத்தால் கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.