ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :7 ஜூலை 2026, 1:25 am IST

கோவை, உக்கடம் பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற பெண் மீது கேரள அரசுப் பேருந்து மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், பாலக்காடு ஆலத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கபீா் மனைவி கயா் நிஷா (57). இவா் உக்கடம் பேருந்து நிலையத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்து சென்றுள்ளாா். அப்போது, வேகமாக வந்த கேரள அரசுப் பேருந்து மோதியதில் கயா் நிஷா தலையில் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் அவரது குடும்பத்தினா் விருப்பத்தின்பேரில் பாலக்காடு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், செல்லும் வழியிலேயே கயா் நிஷா உயிரிழந்தாா்.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய கேரள அரசுப் பேருந்து ஓட்டுநரான பாலக்காடு, தேன்குறிச்சி பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (55) மீது கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.