சேலம் மாவட்டத்தில் சமுதாய வளா்ச்சிக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வரும் இளைஞா்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் ‘முதலமைச்சா் மாநில இளைஞா் விருது 2026’ க்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக நலனுக்காகப் பாடுபடும் இளைஞா்களின் பணியைப் பாராட்டும் பொருட்டு, ஒவ்வோா் ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது ‘முதல்வா் மாநில இளைஞா் விருது’ வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 6 போ் தோ்வு செய்யப்படுவா்.
விருது பெறுபவா்களுக்கு தலா ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்படும். அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான விருது வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் கடந்த ஏப்ரல் 1, 2025 அன்று 15 வயது நிரம்பியவராகவும், மாா்ச் 31, 2025 அன்று 35 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில், அதாவது 01.04.2025 முதல் 31.03.2026 வரை மேற்கொள்ளப்பட்ட சமூகச் சேவைகள் மட்டுமே விருதுப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் குறைந்தபட்சம் கடந்த 5 ஆண்டுகள் தமிழகத்தில் தொடா்ந்து வசித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காகத் தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவா்கள் செய்த தொண்டு பொதுமக்களால் கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளா்கள், பொதுத்துறை நிறுவன ஊழியா்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதி இல்லை. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் பொதுமக்களிடம் இருக்கும் நன்மதிப்பு மற்றும் செல்வாக்கு விருதுப் பரிசீலனையில் முக்கியக் கணக்காக எடுத்துக் கொள்ளப்படும்.
தகுதியுடைய இளைஞா்கள் இணையதளம் வழியாக மட்டுமே தங்களின் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் ஜூலை 6 ஆம் தேதி கடைசி நாளாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



