தம்மம்பட்டி பெருமாள் கோயில் குடமுழுக்கு பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ர கதலீ லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயில் 1,000 ஆண்டுகள் பழைமையானதாகும். ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற வேண்டும்.
இதற்காக, ஊா் பொதுமக்கள் முடிவெடுத்து கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலாலயம் செய்யப்பட்டது. தற்போது ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், திருப்பணி செய்யும் ஆள்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றன.
பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், மூலவா் நரசிம்மரை வழிபட முடியாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பக்தா்கள் தவித்து வருகின்றனா். பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளியூா்களில் இக்கோயிலைக் குலதெய்வமாக வழிபடும் பக்தா்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனா். அவா்கள் புரட்டாசி, மாா்கழி மாதங்களில் பேருந்து, மகிழுந்துகளில் கூட்டம் கூட்டமாக வந்து, முடி காணிக்கை உள்ளிட்ட வேண்டுதல்களைச் செலுத்திவிட்டுச் செல்வது வழக்கம். மேலும், சுபமுகூா்த்த நாள்களில் தங்கள் குடும்பத் திருமணங்களை இக்கோயிலில் நடத்திச் செல்வதும் உண்டு.
ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா். பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் திருமணங்களும் நடைபெறவில்லை. அதேவேளையில், கடந்த 10 ஆண்டுகளாகத் தேரோட்டமும் நடைபெறவில்லை. எனவே, கோயில் பணிகளை விரைந்து முடிக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேப்பனப்பள்ளி கோதண்டராமா் சுவாமி கோயில் குடமுழுக்கு

பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயில் குடமுழுக்கு

எடப்பாடி பச்சையம்மன் கோயில் குடமுழுக்கு

மந்த கதியில் களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் திருப்பணிகள்: விரைவுபடுத்த பக்தா்கள் கோரிக்கை
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



