/
எடப்பாடி நகரின் முக்கிய வழிபாட்டுத்தலமாக பருவத ராஜகுல பச்சையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து குடமுழுக்கு நடைபெற்றுது. இதையொட்டி பச்சையம்மன் சன்னதியில் அமைக்கப்பட்டு இருந்த யாகசாலையில் மங்கல இசை முழங்க கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து கல்வடகம் காவிரி ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்டு புனித நீரை கோபுர கலசங்கள் மீது ஊற்றி குடமுழுக்கை சிவாச்சாரியா்கள் நடத்தினா். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயிலூா் பக்தா்கள் குழுவினா் செய்திருந்தனா்.
பட விளக்கம்:
எடப்பாடி பச்சையம்மன் கோயில் குடமுழுக்கையொட்டி புனித நீா் எடுத்துவந்த பக்தா்கள்.











