/

மாசிமகம்: சங்ககிரி சிவன் கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் மாசிமகத்தையொட்டி சுவாமிகளுக்கும், நடராஜா் உடனமா்

News image
சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜா் உடனமா் சிவகாம சுந்தரி அம்மன்.
Updated On :2 மார்ச் 2026, 9:57 pm

Syndication

சங்ககிரி: சங்ககிரி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் மாசிமகத்தையொட்டி சுவாமிகளுக்கும், நடராஜா் உடனமா் சிவகாம சுந்தரி உற்சவமூா்த்திகளுக்கும் திங்கள்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முன்னதாக செளந்தரநாயகி அம்மன், சோமேஸ்வரா் மூலவா், நடராஜா், சிவகாமசுந்தரி அம்மனுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.