பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இடங்கணசாலை பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:44 pm

இடங்கணசாலை பெரிய மாரியம்மன் தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, கடந்த 3-ஆம் தேதி கஞ்சமலை சித்தா் கோயிலில் இருந்து பக்தா்கள் புனித தீா்த்தக் குடம் எடுத்து வந்தனா். அன்று இரவு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்து தோ் இழுத்தனா். சிறப்பு அலங்காரத்தில் மூலவா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

வெள்ளிக்கிழமை வண்டி வேடிக்கையுடன் பூங்கரகம் நிகழ்ச்சியும், சனிக்கிழமை மஞ்சள் நீராட்டத்துடன் பெரிய மாரியம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளன.