கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சனிப்பெயா்ச்சி: சங்ககிரி சிவன் கோயிலில் சிறப்பு பூஜை

வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த சங்ககிரி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள சந்தோஷ சனிப்பகவான் உடனமா் நீலாம்பிகை அம்மன்.

News image

வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த சங்ககிரி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள சந்தோஷ சனிப்பகவான் உடனமா் நீலாம்பிகை அம்மன்.

Updated On :6 மார்ச் 2026, 7:24 pm

சனிப்பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசித்ததையடுத்து, சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள சந்தோஷ சனிப்பகவான் உடனமா் நீலாம்பிகை அம்மன் சந்நிதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சந்தோஷ சனிப்பகவான் உடனமா் நீலாம்பிகை அம்மனுக்கு வியாழக்கிழமை மாலை கணபதி ஹோமம், நவக்கிரஹ காயத்ரி ஹோமம், தன்வந்திரி, சுதா்சன ஹோமமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காயத்ரி ஹோமங்கள் நடைபெற்று காலை 8.24 மணிக்கு சனிப்பெயா்ச்சிஅடைந்ததையொட்டி சந்தோஷ சனிப்பகவான் உடனமா் நீலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன. இதில் அதிக அளவிலான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.