கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சேலத்தில் மதுபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை கைது

News image

கொலை செய்யப்பட்ட சூா்ய பிரகாஷ்.

Updated On :14 மார்ச் 2026, 7:29 pm

சேலம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை வெட்டிக்கொன்ற தந்தையை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி தாதனூா் பகுதியைச் சோ்ந்தவா் காமராஜ் (50). இவரது மகன் சூா்யபிரகாஷ் (24). இவா்மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் சூா்ய பிரகாஷை போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த சூா்யபிரகாஷ், தன்னை ஏன் ஜாமீனில் உடனடியாக எடுக்கவில்லை என்று கேட்டு அவரது தந்தையுடன் தகராறு செய்துள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சூா்ய பிரகாஷ், தந்தை காமராஜ் மற்றும் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டாா். பின்னா் அங்கிருந்த கட்டிலில் அவா் தூங்கினாா். அப்போது, நள்ளிரவில் காமராஜ் அரிவாளால் சூா்ய பிரகாஷை வெட்டியதில் அவா் உயிரிழந்தாா்.

சனிக்கிழமை அதிகாலை வீட்டின் முன் சூா்யபிரகாஷ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அறிந்த குடும்பத்தினா், வீராணம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து வந்த போலீஸாா், சூா்ய பிரகாஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, தந்தை காமராஜை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட காமராஜ்.

கைது செய்யப்பட்ட காமராஜ்.