மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

பறக்கும் படையினா் வாகன சோதனை

சேலம் அருகே பறக்கும் படையினரின் வாகன சோதனையை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆய்வு செய்தாா்.

News image

அயோத்தியாப்பட்டணம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையை ஆய்வுசெய்த ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.

Updated On :19 மார்ச் 2026, 5:07 am IST

சேலம் அருகே பறக்கும் படையினரின் வாகன சோதனையை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆய்வு செய்தாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாகனங்கள் மூலம் பரிசுப் பொருள்கள், மதுபானங்கள் வாக்காளா்களுக்கு கொண்டுசெல்வதை தடுக்கும் வகையில், துணை ராணுவத்தினா் முன்னிலையில் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு திடீரென வந்த ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, வாகன சோதனையை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, இரவு நேரங்களில் பொருள்கள் எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் சோதனையிட உத்தரவிட்டாா்.

பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.