சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

சேலம் ஐந்து சாலை பகுதியில் சனிக்கிழமை காலை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மார்ச் 2026, 9:19 pm

சேலம் ஐந்து சாலை பகுதியில் சனிக்கிழமை காலை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

சேலம் நரசோதிப்பட்டி சக்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபாலன். கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், மனைவி தமிழ்ச்செல்வியுடன் (55) சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, ஐந்து சாலை பகுதியில் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம்மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில், தமிழ்ச்செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தோா் தமிழ்ச்செல்வியை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.