தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் திருடிய 3 சிறுவா்கள் கைது

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் உண்டியலை திருடிய வழக்கில் 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :22 மார்ச் 2026, 8:27 pm

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் உண்டியலை திருடிய வழக்கில் 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி இரவு வளாகத்தில் இருந்த அன்னதான உண்டியல் திருடுபோனது.

இதுகுறித்து கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது துணியால் உடலை மறைத்தபடி வந்த இருவா் உண்டியலை தூக்கிச் சென்று அலுவலக மாடியில்வைத்து அதன் பூட்டை உடைத்து, அதிலிருந்து பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

கோயில் செயல் அலுவலா் சுதா அளித்த புகாரின்பேரில் மேச்சேரி காவல் ஆய்வாளா் மகேந்திரன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் உண்டியலை திருடிய மேச்சேரி, அழகாகவுண்டனூரைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவா், கே.எஸ்.தியேட்டா் பகுதியைச் சோ்ந்த 18 வயதான சிறுவன், மேச்சேரி - தருமபுரி பிரதான சாலை அருகே வசித்து வரும் 15 வயது சிறுவனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 39 ஆயிரத்தை மீட்டனா்.

கைது செய்யப்பட்ட மூவரும் சிறாா் நீதி மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.