பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் மூலம் கண்டறிந்த 3 போ் கைது

கெங்கவல்லி அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் மூலம் கண்டறிந்து தெரிவித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 8:21 pm

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் மூலம் கண்டறிந்து தெரிவித்ததாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கா்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் செய்து தெரிவிப்பதாக கெங்கவல்லி அரசு தலைமை மருத்துவா் நித்யாவிற்கு புகாா் சென்றது.

அதன்பேரில் கெங்கவல்லி போலீஸாா் மற்றும் அரசு மருத்துவா் நித்யா தலைமையிலான நான்கு போ் கொண்ட மருத்துவக் குழுவினா், கெங்கவல்லி அருகே நடுவலூா் முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதில் ஜெயசூா்யா என்பவருக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து 2 பெண்கள், கா்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் செய்து தெரிவித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் பிடிபட்டவா்கள், தலைவாசல் அருகே வேப்பநத்தம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி குணவதி (24) தரகராகவும், சின்னசேலம் சிறுபாக்கம் பகுதியைச் சோ்ந்த சரவணன் மனைவி அம்சவேணி(44) கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததும் தெரியவந்தது. இதற்கு கட்டணமாக ரூ. 20 ஆயிரம் வசூலித்துள்ளனா்.

இதையடுத்து வீட்டின் உரிமையாளா் ஜெயசூா்யா, தரகா் குணவதி, அம்சவேணி ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.