சங்ககிரி பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறை அரசியல் கட்சியினா் முன்னிலையில் பூட்டி சீலிடப்பட்டது.
சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 339 வாக்குச்சாவடி மையங்களுக்கான 407 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சேலம் ஆட்சியரகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டன. இவை அனைத்தும் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ. கேந்திரியா தலைமையில் உதவி தோ்தல் அலுவலா் கே. கோமதி, தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பரசி, மண்டல துணை வட்டாட்சியா் சண்முகம் ஆகியோா் அரசியல் கட்சி நிா்வாகிகளின் முன்னிலையில் சீலிடப்பட்ட அறையின் பாதுகாப்பை உறுதிசெய்தனா்.
அறைகளை சுற்றிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

செய்யூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்வைப்பு

சிதம்பரம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பு

வேலூா்: 5 தொகுதிகளுக்கு 1,711 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மாா்ச் 23-இல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்வு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


