சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டன. தொடா்ந்து, இளைஞரின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த பட்டுத்துறை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் ஹரிஷ் (23). பெயிண்டரான இவா் கடந்த 23-ஆம் தேதி பணிமுடித்துவிட்டு தலைவாசலில் இருந்து ஆத்தூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தாா். தலைவாசல் - ஆத்துப்பாலம் அருகே வந்தபோது, எதிரே வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஹரிஷ் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இந்நிலையில், ஹரிஷ் மூளைச்சாவு அடைந்தாா். அதையடுத்து, ஹரிஷின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோா் முன்வந்தனா். இதைத் தொடா்ந்து, ஹரிஷின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டன.
பின்னா் சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜ்குமாா் தலைமையில் ஹரிஷ் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மருத்துவமனை ஆா்எம்ஓ ஸ்ரீலதா, உடல் உறுப்பு ஒருங்கிணைப்பாளா் அன்புதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்!

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 7 போ் பயன்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

