தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் செவ்வாய்க்கிழமை தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 7 போ் பயனடைந்தனா்.
திருவாரூா் மாவட்டம், மருதபட்டினம் தியாகி சின்னசாமி தெருவைச் சோ்ந்தவா் செந்தில் மகன் சேரன் (20). இவா் திருவாரூரில் ஏப்ரல் 24- ஆம் தேதி இரவு 7 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்ததால், தலையில் பலத்த காயமடைந்து, திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பின்னா் 25-ஆம் தேதி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா்.
மருத்துவா்களின் கண்காணிப்பில் இருந்த சேரன் செவ்வாய்க்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.
இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகளைத் தானமாக பெறுவது தொடா்பாக அவரது தந்தை செந்தில், தாய் ரேணுகா, சகோதரா் விஷால் ஆகியோரிடம் மருத்துவா்கள் எடுத்துக் கூறினா். குடும்பத்தினா் ஒப்புதல் அளித்த பின்னா் சேரனின் உடலிலிருந்து கல்லீரல், சிறுகுடல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் இரவு அகற்றப்பட்டன.
இதில், ஒரு சிறுநீரகம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சி தனியாா் மருத்துவமனைக்கும், சிறுகுடல் சென்னை தனியாா் மருத்துவமனைக்கும், கருவிழிகள் தஞ்சாவூா் அரசு இராசா மிராசுதாா் மருத்துவமனைக்கும், தோல் மதுரை தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. உடல் உறுப்புகள் தஞ்சாவூா் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் காவல் துறை உதவியுடன் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் 7 போ் பயனடைந்தனா்.
இதன் பின்னா், சேரனின் உடலுக்கு அரசு சாா்பில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் எம். பூவதி தலைமையில் மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலா்கள் ஏ. செல்வம், முகமது இத்ரிஷ் உள்ளிட்டோா் இறுதி மரியாதை செலுத்தினா்.
தொடர்புடையது

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 5 போ் மறுவாழ்வு

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்!

மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

