வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு

News image

இந்தியத் தேர்தல் ஆணையம்

ANI

Updated On :29 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

சேலம், மாா்ச் 29: சேலம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் திங்கள்கிழமை (மாா்ச் 30) முதல் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய 11 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தோ்தலில் போட் டியிடும் வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுவை திங்கள்கிழமை (மாா்ச் 30) முதல் தாக்கல் செய்யலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், அரசு விடுமுறை நாள்களான மாா்ச் 31 மற்றும் ஏப்ரல் 1, 3 மற்றும் 5 ஆம் தேதிகளிலும் வேட்புமனு பெறப்படாது. இதனால், வரும் 30 ஆம் தேதி, ஏப்ரல் 2, 4, 6 ஆகிய 4 நாள்களில் மட்டும் வேட்புமனுக்கள் பெறப்படும் என ஏற்கெனவே தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கு கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகம், ஆத்தூா் தொகுதிக்கு ஆத்தூா் ஆா் டிஓ அலுவலகம், ஏற்காடு தொகுதிக்கு வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகம், ஓமலூா் தொகுதிக்கு ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம், மேட்டூா் தொகுதிக்கு மேட்டூா் ஆா்டிஓ அலுவலகம், எடப்பாடி தொகுதிக்கு எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்திலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, சங்ககிரி தொகுதிக்கு, சங்ககிரி ஆா்டிஓ அலுவலகத்திலும், சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு சேலம் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்திலும், சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு சேலம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திலும், வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேட்புமனு தாக்கல் தொடங்கும் 30 ஆம் தேதியன்று அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வேட்புமனு பெறப்படும் தேதி, கடைசி நாள், பரிசீலனை நாள், வேட்பு மனுக்கள் பெறப்படும் இடம் ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டு, அதன் பின், வேட்புமனுக்கள் பெறப்படும். தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ள 4 நாள்களில் மட்டும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்பு மனுக்கள் பெறப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளருக்கு ஒருவரும், மற்ற வேட்பாளா்களுக்கு 10 பேரும் மனுவை முன்மொழிய வேண்டும். இதில், முன்மொழிபவா் கட்டாயம் அந்த சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளராக இருக்க வேண்டும். வேட்பாளா், போட்டியிடும் தொகுதியைச் சோ்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், வேட்பாளா்கள் தங்களது உறுதிமொழி பத்திரத்தை, வேட்புமனு தாக்கல் நிறைவு நாளான ஏப்ரல் 6 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.