சேலம் கருப்பூா் பகுதியில் தண்டவாளத்தில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலத்தை அடுத்த கருப்பூா் மற்றும் தின்னப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே டவுன் லைன் ரயில்வே தண்டவாளப் பகுதியில் கடந்த 2-ஆம் தேதி இரவு சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலமாக கிடந்தாா். தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்து கிடந்தவா் யாா், எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 0427-2447494, 94981 01963 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளுமாறு ரயில்வே போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

முதியவா் சடலம்: போலீஸாா் விசாரணை

எலச்சிபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீசாா் விசாரணை
நெல்லையில் தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவா் மீட்பு

திருமணிமுத்தாற்றில் இளைஞா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


