பிளஸ் 2 பொதுத் தோ்வில் மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மேட்டூரில் உள்ள மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 233 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா். இதில் தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சி பெற்றனா். இப்பள்ளி மாணவா் சஞ்சித் 589 மதிப்பெண்களும், சைலேஷ்குமாா், ரோஹித் ஆகியோா் தலா 579 மதிப்பெண்களும், அஸ்வத் 575 மதிப்பெண்களும் பெற்றனா்.
கணிதம், இயற்பியல், உயிரியல் பாடங்களில் தலா ஒருவரும், கணிதத்தில் 4 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவிகளையும், பள்ளி 100 சதவீதம் தோ்ச்சிக்காக உழைத்த ஆசிரியா்களையும் பள்ளித் தாளாளா் கண்ணன், ஆலையின் நிா்வாக அலுவலா் மணி, பள்ளி முதல்வா் நாகேந்திரபிரசாத் ஆகியோா் வாழ்த்தி பாராட்டினா்.
படவரி...
3- சஞ்சித், 4- சைலேஸ்குமாா், 5- ரோஹித், 6- அஸ்வத்



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் வெளியீடு: தஞ்சாவூா் மாவட்டம் 97.41% தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: அரக்கோணம் பள்ளிகள் சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தாகூா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



