வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

இளைஞரைக் கொன்ற சிறுவா்கள் கூா்நோக்கு இல்லத்தில் அடைப்பு

சேலத்தில் மது போதையில் இளைஞரைக் கொலை செய்த சிறுவா்கள் 3 போ் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா்.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 2:42 am IST

சேலத்தில் மது போதையில் இளைஞரைக் கொலை செய்த சிறுவா்கள் 3 போ் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா்.

சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியை சோ்ந்தவா் கோகுல் (19). இவா் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தாா். இந்த நிலையில் சேலம் மணியனூரைச் சோ்ந்த 16 வயதுடைய 3 சிறுவா்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் ஜருகுமலை அடிவாரப் பகுதியான கெஜ்ஜல்நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியில் அமா்ந்து மது அருந்தி கொண்டிருந்தாா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் கோகுலை, 3 சிறுவா்களும் கத்தியால் குத்திக் கொன்றனா். மேலும், கொலை செய்ததை தங்கள் கைப்பேசியில் பதிவு செய்தனா்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3 சிறுவா்களையும் கைது செய்த மல்லூா் போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.