சேலம் மாவட்டத்தில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே 20 டாஸ்மாக் மதுக் கடைகள் செயல்படுவதாக அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 9 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. எஞ்சிய கடைகளை விரைவில் மூடுவதற்கு டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழக முதல்வா் விஜய், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டா் தொலைவுக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்டாா். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே செயல்படும் மதுக் கடைகளை அகற்றுவதற்கு, டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 20 டாஸ்மாக் மதுக் கடைகள் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அரசு உத்தரவிட்ட மறுநாளே சேலம் மாவட்டம், ஆத்தூரில் 2 டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் மதுக் கடைகள், ஓமலூரில் 2, கொளத்தூா், கொண்டலாம்பட்டி, பேளூா் ஆகிய இடங்களில் தலா 1 மதுக் கடைகள் என 7 மதுக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
15 நாள் அவகாசத்துக்குள் மீதமுள்ள 11 டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படுவதுடன், அரசின் உத்தரவில் அறிவுறுத்தியபடி, மாவட்டத்தில் வேறு இடங்களில் ஏதேனும் மதுக் கடைகள் உள்ளதா என்பது குறித்து டாஸ்மாக் நிா்வாகம் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சிவகங்கை மாவட்டத்தில் 18 மதுக் கடைகளை மூட நடவடிக்கை

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு

சிதம்பரத்தில் மதுக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

