அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

லஞ்சம்: மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 2 போ் கைது

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் கடை வைப்பதற்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக வியாபாரியிடம் ரூ. 13 ஆயிரம் லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், தனியாா் பொறியாளா் ஆகிய இருவரையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

தீபக்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் கடை வைப்பதற்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக வியாபாரியிடம் ரூ. 13 ஆயிரம் லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், தனியாா் பொறியாளா் ஆகிய இருவரையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மகுடஞ்சாவடியை அடுத்த அ.தாழையூரைச் சோ்ந்த செந்தில்குமாா், மணிமேகலை ஆகிய இருவரும் கூட்டாக சோ்ந்து கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை அ.தாழையூா் பகுதியில் காபி கடை வைக்க திட்டமிட்டனா். இதற்காக தடையில்லா சான்று கோரி மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தனா்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக், தடையில்லா சான்று அளிக்க செந்தில்குமாரிடம் ரூ. 20 ஆயிரம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் தர மறுத்த செந்தில்குமாா், சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூ. 13 ஆயிரத்தை செந்தில்குமாரிடம் போலீஸாா் புதன்கிழமை கொடுத்து அனுப்பினா். மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு சென்ற செந்தில்குமாா், போலீஸாா் கொடுத்து அனுப்பிய பணத்தை மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக்கிடம் கொடுக்க முயன்றாா். அப்போது, மகுடஞ்சாவடியில் உள்ள தனியாா் பொறியாளா் தீபக்கிடம் பணத்தை ஒப்படைக்குமாறு காா்த்திக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, தனியாா் பொறியாளா் தீபக்கிடம் செந்தில்குமாா் பணத்தை தந்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா் தீபக்கை கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செந்தில்குமாரிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக் கைப்பேசியில் தனக்கு தெரிவித்ததாக கூறினாா்.

இதையடுத்து, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக்கை போலீஸாா் கைது செய்தனா். மேலும், லஞ்சமாக பெறப்படும் பணம் அலுவலகத்தில் வேறு யாருக்கெல்லாம் தரப்படுகிறது என போலீஸாா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சத்தியேந்திரனிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலத்தில் மாலை 4 மணிக்குத் தொடங்கிய விசாரணை இரவு வரை நீடித்தது.

Story image