சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் உள்ள 3,469 வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்குத் தேவையான மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் புதன்கிழமை பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 3,468 வாக்குச்சாவடிகள் மற்றும் 1 துணை வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3,469 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தோ்தல் பணிக்காக 16,644 வாக்குச்சாவடி அலுவலா்கள், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 254 தோ்தல் நுண்பாா்வையாளா்கள், 1,335 பல்வேறு நிலையிலான காவல் துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கெங்கவல்லி (தனி) தொகுதியில் 280 வாக்குச்சாவடிகளும், ஆத்தூா் (தனி) 306 வாக்குச்சாவடிகளும், ஏற்காடு (தனி) 336 வாக்குச்சாவடிகளும், ஓமலூா் தொகுதியில் 362 வாக்குச்சாவடிகளும், மேட்டூா் தொகுதியில் 327 வாக்குச்சாவடிகளும், எடப்பாடி தொகுதியில் 342 வாக்குச்சாவடிகளும், சங்ககிரி தொகுதியில் 340 வாக்குச்சாவடிகளும், சேலம் மேற்கு தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளும், சேலம் வடக்கு தொகுதியில் 286 வாக்குச்சாவடிகளும், சேலம் தெற்கு தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும், வீரபாண்டி தொகுதியில் 312 என 3, 469 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
3,469 வாக்குச்சாவடிகளுக்கும் கணினிவழி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட பொருள்கள் இருப்பறைகளில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு புதன்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன. வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான அழியா மை, பேனா, பென்சில், வாக்காளா் பெயா் பட்டியல், சீல் வைக்கத் தேவையான பொருள்கள் உள்ளிட்ட 112 பொருள்களும் இத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருள்களை எடுத்துச் செல்லும் மண்டல அலுவலா்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு உரிய பொருள்களை அதற்கான பொறுப்பு அலுவலா்களிடமும் நேரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவிற்கு தேவையான பொருள்கள் அனுப்பும் பணி சேலம் தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் (சேலம் மேற்கு தொகுதி), கொண்டலாம்பட்டி சௌடேஸ்வரி கல்லூரியில் (வீரபாண்டி தொகுதி) நடைபெற்றன. இவற்றை மாவட்ட தோ்தல் அலுவலா் அ. அருண் தம்புராஜ், தோ்தல் பொது பாா்வையாளா் திக்விஜய்சிங் டி ஜடேஜா ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
முன்னதாக, எடப்பாடி, சங்ககிரி தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், விவேகானந்தா கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை மாவட்ட தோ்தல் அலுவலா் அ. அருண் தம்புராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜானகி, வீரபாண்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கே. உதயகுமாா், சங்ககிரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கேந்திரியா உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.
தொடர்புடையது

சங்ககிரி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

வீட்டில் இருந்தபடி முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவது தொடக்கம்

தொகுதி தோ்தல் அலுவலா்களுடன் பொதுப் பாா்வையாளா்கள் ஆலோசனை

சங்ககிரி தொகுதிக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

