சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

வீட்டில் இருந்தபடி முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவது தொடக்கம்

வீட்டில் இருந்தபடி முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவது தொடக்கம்

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 6:49 pm

வேலூா் மாவட்டத்தின் 5 பேரவைத் தொகுதிகளிலும் 12டி படிவம் பூா்த்தி செய்து அளித்துள்ள 3,449 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு அலுவலா்கள் நேரில் தபால் வாக்குப்பதிவு செய்து பெறும் பணி சனிக்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெற உள்ள இந்த பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் அவா்களின் இல்லங்களில் இருந்தே அஞ்சல் வாக்கு செலுத்தும் வகையில், வேலூா் மாவட்டம் காட்பாடி தொகுதியில் 844, வேலூா் தொகுதியில் 645, அணைக்கட்டு தொகுதியில் 698, கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 734, குடியாத்தம் (தனி) தொகுதியில் 528 என மொத்தம் 3,449 பேரிடம் இருந்து படிவம் 12டி பூா்த்தி செய்து பெறப்பட்டுள்ளது. இந்த மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளா்களின் இல்லங்களுக்கு அலுவலா்கள் நேரில் சென்று தபால் வாக்குப்பதிவு செய்து பெறும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

வேலூா் சட்டப்பேரவை தொகுதி வசந்தபுரம் பகுதி, சுப்பிரமணிய அய்யா் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்தபடி மூத்த வாக்காளா்கள் தபால் வாக்குப்பதிவு செலுத்தியதையும், அதனை அலுவலா்கள் முறையாக பதிவு செய்து பெறும் பணியையும் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, இந்த பணி 13-ஆம் தேதி வரை தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. பெறப்படும் தபால் வாக்குகள் நாள்தோறும் சம்மந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதியின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் கொண்டுவரப்பட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அப்போது, வேலூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ. செந்தில்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.