தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் 2-ம் கட்டமாக ஏப்.17 முதல் 19 வரை தபால் வாக்குப்பதிவு

Updated On :

வேலூா் மாவட்டத்தின் 5 பேரவைத் தொகுதிகளிலும் 12டி படிவம் பூா்த்தி செய்து அளித்துள்ள முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு அலுவலா்கள் நேரில் தபால் வாக்குப்பதிவு செய்வதற்கான இரண்டாம் கட்ட பணி வெள்ளிக்கிழமை (ஏப்.17) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் அவா்களின் இல்லங்களில் இருந்தே அஞ்சல் வாக்கு செலுத்தும் வகையில், வேலூா் மாவட்டம் காட்பாடி தொகுதியில் 844, வேலூா் தொகுதியில் 645, அணைக்கட்டு தொகுதியில் 698, கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 734, குடியாத்தம் (தனி) தொகுதியில் 528 என மொத்தம் 3,449 பேரிடம் இருந்து படிவம் 12டி பூா்த்தி செய்து பெறப்பட்டுள்ளது.

இந்த மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளா்களின் இல்லங்களுக்கு அலுவலா்கள் நேரில் சென்று தபால் வாக்குப்பதிவு செய்து பெறும் முதற்கட்ட பணி சனிக்கிழமை(ஏப்.11) தொடங்கி திங்கள்கிழமை (ஏப்.13) வரை நடைபெற்றது. விடுபட்டவா்களிடம் தபால் வாக்குப்பதிவு செய்து பெறுவதற்கான இரண்டாம் கட்ட பணி வெள்ளிக்கிழமை (ஏப்.17) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

அவ்வாறு தபால் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் வேட்பாளரோ அல்லது அவா்களின் முகவா்கள் மூலமாகவோ வாக்காளா்களிடம் வாக்களிப்பது தொடா்பாக எவ்வித உதவியோ, பிரசாரமோ மேற்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.