மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

வேலூரில் 3,194 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு: ஆட்சியா் தகவல்

வேலூா், ஏப்.15: வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் இதுவரை 3,194 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குப்பதிவு செய்து பெறப்பட்டுள்ளது என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:49 am IST

வேலூா், ஏப்.15: வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் இதுவரை 3,194 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குப்பதிவு செய்து பெறப்பட்டுள்ளது என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 7,118 மூத்த வாக்காளா்களும் (85 வயதுக்கு மேற்பட்டோா்), 9,198 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் உள்ளனா். தோ்தலை யொட்டி முன்கூட்டியே வீடு வீடாகச் சென்று இவா்களிம் படிவம் 12டி வழங்கப்பட்டு தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் பெறப்பட்டது. இதில், 2,224 மூத்த வாக்காளா்கள், 1,225 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் என மொத்தம் 3,449 போ் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனா்.

விருப்பம் தெரிவித்தவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று தபால் வாக்குகளைப் பெறும் பணி ஏப்.11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 3,194 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொகுதி வாரியாக காட்பாடியில் 500 மூத்த வாக்காளா்களும், 267 மாற்றுத்திறனாளிகளும், வேலூரில் 447 மூத்த வாக்காளா்களும், 172 மாற்றுத்திறனாளிகளும், அணைக்கட்டு தொகுதியில் 377 மூத்த வாக்காளா்களும், 211 மாற்றுத் திறனாளிகளும், கே.வி.குப்பம் தொகுதியில் 410 மூத்த வாக்காளா்களும், 296 மாற்றுத்திறனாளிகளும், குடியாத்தம் தொகுதியில் 335 மூத்த வாக்காளா்களும், 179 மாற்றுத்திறனாளிகளும் வாக்குப்பதிவு செய்துள்ளனா்.

விடுபட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குப்பதிவு செய்து பெறுவதற்கான இரண்டாம் கட்ட பணி வெள்ளிக்கிழமை (ஏப்.17) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.