ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

வேலூா்: 3,449 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு

வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் 12டி படிவம் பூா்த்தி செய்து அளித்துள்ள 3,449 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு செய்து பெறும் பணி ஏப்ரல் 11 முதல் மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

News image

கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:29 pm

வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் 12டி படிவம் பூா்த்தி செய்து அளித்துள்ள 3,449 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு செய்து பெறும் பணி ஏப்ரல் 11 முதல் மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் அவா்களின் இல்லங்களில் இருந்தே அஞ்சல் வாக்கு செலுத்தும் வகையில் பேரவை தொகுதி வாரியாக அஞ்சல் வாக்கு சீட்டுக்குரிய படிவம் 12டி பூா்த்தி செய்து பெறப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டத்திலுள்ள காட்பாடி தொகுதியில் 844, வேலூா் தொகுதியில் 645, அணைக்கட்டு தொகுதியில் 698, கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 734, குடியாத்தம் (தனி) தொகுதியில் 528 என மொத்தம் 3,449 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்களிடம் இருந்து படிவம் 12டி பூா்த்தி செய்து பெறப்பட்டுள்ளது. இந்த வாக்காளா்களின் பாகம் எண், வரிசை எண் சரிபாா்க்கப்பட்டு அஞ்சல் வாக்கு சீட்டு தயாா் செய்யப்பட உள்ளது.

தொடா்ந்து, வேலூா் மாவட்டத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் இல்லங்களுக்கு சென்று வாக்குப்பதிவு மேற்கொள்வதற்காக 51 வாக்குப்பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மண்டல அலுவலா், உதவி மண்டல அலுவலா், நுண்பாா்வையாளா், காவலா், வீடியோ ஒளிப்பதிவாளா் இடம்பெற்றுள்ளனா். இந்த குழுக்கள் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி ஏப்ரல் 11 முதல் 13-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதையொட்டி, இக்குழுக்களின் மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது -

விண்ணப்பதாரா்கள் அனைவருக்கும் வாக்குப்பதிவு அலுவலா் தபால் வாக்கு சீட்டுகளை கொண்டு வரும் நாள், நேரத்தை முன்னதாகவே வாக்காளா்களிடமிருந்து பெறப்பட்ட படிவம் 12டி-இல் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலா் மூலமாகவோ தகவல் அளிக்க வேண்டும். வாக்குபதிவு அலுவலா் தபால் ஓட்டு பதிவுக்கு செல்லும்போது வாக்காளா் முதல் வருகையின்போது இல்லையென்றால் இரண்டாவது வருகை குறித்த தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். இரண்டாவது வருகையின் போதும் வாக்காளா் இல்லையென்றால் இதுகுறித்த பதிவினை மேற்கொண்டு இவ்வாக்காளா்களுக்கு தபால் வாக்கு சீட்டு வழங்க தேவையில்லை. வேட்பாளா் அல்லது முகவா்கள் வாக்குப்பதிவினை கண்காணிக்க விரும்பினால் வேட்பாளரரோ அல்லது முன்கூட்டியே தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்ற முகவரையோ அனுமதிக்கலாம் என்றாா்.

அப்போது, கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், அனைத்து மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்கள் பங்கேற்றனா்.