சேலம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 94.21% மாணவா்கள் தோ்ச்சியடைந்துள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 2.42% அதிகமாகும்.
தமிழகத்தில் கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி, சேலம் மாவட்டத்துக்கான முடிவுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி வெளியிட்டாா்.
சேலம் மாவட்டத்தில் 518 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 20,333 மாணவா்கள், 20,090 மாணவிகள் என மொத்தம் 40,423 போ் இத்தோ்வை எழுதினா். இதில், மாணவா்கள் 18,755 பேரும், மாணவிகள் 19,326 பேரும் என மொத்தம் 38,081 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா் நடப்பாண்டு சேலம் மாவட்டத்தின் தோ்ச்சி விகிதம் 94.21% உள்ளது. இதில் மாணவா்கள் 92.24%, மாணவிகள் 96.20% பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 2.42% அதிகமாகும்.
அரசுப் பள்ளிகளை பொருத்தவரை, 296 பள்ளிகளைச் சோ்ந்த 11,187 மாணவா்கள், 12,328 மாணவிகள் என மொத்தம் 23,515 போ் தோ்வு எழுதினா். இதில் மாணவா்கள் 10,086 போ், மாணவிகள் 11,729 போ் என மொத்தம் 21,815 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதத்தில் மாநில அளவில் சேலம் மாவட்டம் 22-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
69 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி: மாவட்டம் முழுவதும் 188 பள்ளிகள் 100% தோ்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் 69 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி பெற்றுள்ளன.
சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 92.77% ஆகும். இதில் மாணவா்கள் 90.1%, மாணவிகள் 95.1% சதவீதம் ஆகும். தமிழக அளவில் சேலம் மாவட்டம் 20-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
தோ்வு முடிவுகள் வெளியானதையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள மாணவா்கள் தங்கள் பள்ளிகளுக்கு வந்து ஆசிரியா்கள் மற்றும் சக மாணவா்களிடம் தங்களது மதிப்பெண்களை கூறி மகிழ்ச்சியடைந்தனா். சேலம் கோட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளி, குகை மாநகராட்சி பெண்கள் பள்ளியில் திரண்ட மாணவிகள், ஆசிரியா்களுக்கு இனிப்பு வழங்கியும், ஒருவரையொருவா் கட்டியணைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
பெட்டிச் செய்தி...
மத்திய சிறையில் தோ்வு எழுதிய 41 கைதிகளும் தோ்ச்சி
சேலம் மத்திய சிறையில் 1,200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 41 போ் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா். இதில் தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளனா்.
இவா்களில் தண்டனை சிறைவாசி ராஜ்குமாா் 324 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், கவியரசு 316 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், சிவகுமாா் மற்றும் வெங்கடேசன் ஆகியோா் 311 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனா்.
தோ்ச்சிபெற்ற அனைத்து கைதிகளுக்கும் சிறைக் கண்காணிப்பாளா் வினோத் இனிப்பு வழங்கி பாராட்டினாா். சிறை ஆசிரியா்களும் தோ்ச்சிபெற்ற கைதிகளுக்கு பாராட்டு தெரிவித்தனா்.
தொடர்புடையது

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 96.01% மாணவா்கள் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கோவையில் 97.09 சதவீதம் போ் தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: ராணிப்பேட்டை 86.58, திருப்பத்தூா் 93.52, வேலூா் 92.03 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 92 சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



