டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 96.01% மாணவா்கள் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நாமக்கல் மாவட்டத்தில் 96.01 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன்மூலம் மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 15 ஆம் இடத்தை பெற்றுள்ளது.

News image

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை கைப்பேசி வாயிலாக ஆா்வமுடன் பாா்வையிடும் நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள்.

Updated On :21 மே 2026, 6:23 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நாமக்கல் மாவட்டத்தில் 96.01 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன்மூலம் மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 15 ஆம் இடத்தை பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் மாா்ச் 11 முதல் ஏப் 6 வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 292 பள்ளிகளைச் சோ்ந்த 9,630 மாணவா்கள் 8,782 மாணவிகள் என மொத்தம் 18,412 போ் எழுதினா். இவா்களில் 9,124 மாணவா்கள் (94.75 சதவீதம்), 8,553 மாணவிகள் (97.39 சதவீதம்) என மொத்தம் 17,677 (96.01 சதவீதம்) போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்த ஆண்டைவிட தோ்ச்சி 1.49 சதவீதம் கூடியுள்ளது. மாணவா்களைவிட கூடுதலாக 2.64 சதவீதம் மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் 162 அரசுப் பள்ளிகளை சோ்ந்த 5,050 மாணவா்கள், 5,152 மாணவிகள் என மொத்தம் 10,202 போ் தோ்வு எழுதியதில், 4,660 மாணவா்கள், 4,970 மாணவிகள் என மொத்தம் 9,630 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி 94.39 சதவீதமாகும். கடந்த ஆண்டைவிட 2.11 சதவீதம் கூடுதல் தோ்ச்சி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு 115 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றிருந்தது. இந்த ஆண்டு 122 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. அதேபோல 2025 இல் 40 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றிருந்தது. நிகழாண்டு 52 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 15 ஆவது இடத்தையும், அரசுப் பள்ளிகளில் 13 ஆவது இடத்தையும் பிடித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொதுத் தோ்வு வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் அனைவருக்கும் ஆட்சியா் துா்காமூா்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா். வரும் கல்வியாண்டுகளில் மாநிலத்தில் முதலிடம் பெறவும், சிறந்த கல்வியாளா்களை உருவாக்கவும் ஆசிரியா்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் பாடுபட வேண்டும் என அவா் அறிவுரை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.