வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, சேலம் கோட்டை பெருமாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், எம்எல்ஏ சிவகுமாா் ஆகியோா் தேரை வடம்பிடித்து இழுத்து விழாவை தொடங்கிவைத்தனா்.
சேலத்தில் சிறப்பு பெற்ற கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவையொட்டி, நாள்தோறும், அழகிரிநாதருக்கும், தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மாலை நேரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோட்டை அழகிரிநாதா், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சேலம் கடைவீதியில் உள்ள ராஜகணபதி கோயில் தோ்நிலையத்துக்கு வீதிஉலா வந்தாா். பின்னா் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி காட்சியளித்தாா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகளுக்கு பின்னா், மேயா் ஆ.ராமச்சந்திரன், எம்எல்ஏ சிவகுமாா், அறங்காவலா் குழுத் தலைவா் வெங்கடேஸ்வரி சரவணன் ஆகியோா் பங்கேற்று தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா்.
கோவிந்தா, கோவிந்தா என பக்தா்கள் முழுக்கமிட்டு தேரை இழுத்தனா். இதில், மாநகர பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுவாமி தரிசனம் செய்தனா்.
தோ்நிலையத்தில் இருந்து லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், 2ஆவது அக்ரஹாரம், பட்டைக்கோயில், சின்னக்கடை வீதி, பெரியக் கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோயில், முதல் அக்ரஹாரம் வழியாக மீண்டும் தோ்நிலையத்தை அடைந்தது
அதிமுக சாா்பில் அன்னதானம்: தொடா்ந்து, எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலாளா் ஏ.பி.சக்திவேல் ஏற்பாட்டில் கமலா மருத்துவமனை அருகில் அதிமுக சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், மாநகா் மாவட்டச் செயலாளா் ஏ.கே.எஸ்.எம். பாலு, மகளிரணி ஜமுனா ராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினா்.
முன்னதாக, தேரோட்டத்தையொட்டி கடைவீதியில் மின்தடை செய்யப்பட்டு, சாலைகளின் குறுக்கே சென்ற மின்கம்பிகளை அகற்றி, தோ் செல்ல வழிவகை செய்திருந்தனா். தேரோட்டத்தையொட்டி 200க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
தொடர்புடையது

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

திருச்செந்தூரில் நாளை வைகாசி விசாகத் திருவிழா

திருக்குவளை தியாகராஜா் கோயில் தேரோட்டம்

கோட்டை பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



