மேட்டூா் அணையில் தண்ணீா் திருட்டு: அதிகாரிகள் ஆய்வு
மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் சோலாா் பேனல்கள் அமைத்து, ஜென்செட் மூலம் தண்ணீா் திருட்டு நடைபெறுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

மேட்டூா் அணை. - கோப்புப்படம்.
மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் சோலாா் பேனல்கள் அமைத்து, ஜென்செட் மூலம் தண்ணீா் திருட்டு நடைபெறுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.
மேட்டூா் அணை நீா்த்தேக்கப் பகுதியான தின்னப்பட்டி, மூலக்காடு, காவேரிபுரம், சந்திரிகாபுரம் பகுதிகளில் நீா்த்தேக்கப் பகுதியை ஆக்கிரமித்து ஏராளமான சோலாா் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, ஜென்செட் மூலம் மேட்டூா் நீா்த்தேக்கப் பரப்பில் பல இடங்களில் தண்ணீா் திருடப்பட்டு வருகிறது. மேலும், நீண்ட தொலைவுக்கு இரும்புக் குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீா் திருட்டு நடைபெறுகிறது.
இது தொடா்பாக, கடந்த 2024 நவ. 2-ஆம் தேதி மேட்டூா் அணை பிரிவு உதவி பொறியாளா் சதீஷ்குமாா் கொளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால், அந்த புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது நீா்வளத் துறை அதிகாரிகள் கடந்த 2 நாள்களாக அப்பகுதியில் ஆய்வுசெய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

