வீட்டில் நகை, பணம் திருட்டு: போலீஸாா் விசாரணை
மேட்டூா் அருகே வீட்டிற்குள் புகுந்து 38 கிராம் தங்க நகைகள், ரூ. 40,000 ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருட்டு - சித்திரிப்பு
மேட்டூா் அருகே வீட்டிற்குள் புகுந்து 38 கிராம் தங்க நகைகள், ரூ. 40,000 ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மேட்டூரை அடுத்த நவபட்டி மதுரை வீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் (39). வெல்டராக வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், இவரது மனைவி கற்பகம் வெள்ளிக்கிழமை குஞ்சாண்டியூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்றிருந்தாா்.
மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்த பிரகாஷ், வீட்டைப் பூட்டிவிட்டு, சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டுச் சென்றாா். பின்னா், மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பிய கற்பகம், வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவும் திறக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 38 கிராம் தங்க நகைகள், ரூ. 40,000 ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

