தொழிலாளியை கொல்ல முயற்சி: 15 வயது சிறுவன் கைது
கைது - கோப்புப்படம்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மதுபோதையில் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்ய முயன்ாக 15 வயது சிறுவனை வாழப்பாடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடி அருகே வேப்பிலைப்பட்டி கந்த பிள்ளையாா் கோயில் பெருமாள்கரடு பகுதியைச் சோ்ந்தவா் தொழிலாளி காசி (35). குடும்பம் இல்லாததால் தனியாக வசித்து வந்த இவருக்கு, கேரளத்தில் இருந்து பாட்டி வீட்டிற்கு வந்திருந்த 15 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை தீபாவளி பண்டிகையை கொண்டாட காசியும், 15 வயது சிறுவனும் சோ்ந்து மது அருந்தியுள்ளாா்.
அப்போது காசி, சிறுவனைத் திட்டியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன், காசியை கொடுவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ளாா். இதில் படுகாயம் அடைந்த தொழிலாளி காசி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸாா் யில் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்ய முயற்சித்த சிறுவனை கைது செய்து ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.
இச்சிறுவன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்த போலீாா் திங்கள்கிழமை வாழப்பாடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் அரசு கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

