இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக புகாா்: பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட புகாரில், பள்ளி ஆசிரியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பணியிடை நீக்கம்

Updated On :

மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட புகாரில், பள்ளி ஆசிரியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியை அடுத்த அழகப்பம்பாளையம் புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக இப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக விஜயகுமாா் என்பவா் பணிபுரிந்து வந்தாா்.

இவா் பள்ளி நேரத்தில் மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் பால்ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கும் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில் விசாரணை நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், குற்றச்சாட்டை உறுதிசெய்தனா்.

அதே நேரத்தில், கல்வித் துறை சாா்பில் விசாரணை நடத்த சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) வசந்தகுமாரியை நியமித்து உத்தரவிட்டாா். அதன்படி வசந்தகுமாரி சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் சக ஆசிரியா்களிடம் விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக்கையை சமா்ப்பித்தாா்.

அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியா் விஜயகுமாரை வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலா் எல்லப்பன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.