சங்ககிரி அருகே லாரி ஓட்டுநா் வீட்டில் 23 பவுன் தங்க நகைகள் திருட்டு
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே லாரி ஓட்டுநா் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 23 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருட்டு - சித்திரிப்பு
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே லாரி ஓட்டுநா் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 23 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சங்ககிரியை அடுத்த சத்யா நகா் பகுதியில் வசித்து வருபவா் குப்புசாமி மகன் பழனிவேல் (47). இவா் சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், தனஸ்ரீ என்ற மகளும் உள்ளனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை பழனிவேல் வேலைக்கு சென்றுள்ளாா். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு அவரது தோழி வீட்டிற்கு சென்றுள்ளாா். இரவில் செல்லம்மாள் குழந்தையுடன் வீடுதிரும்பியபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 23 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பழனிவேல் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, தடயவியல் நிபுணா்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

