பழங்குடியினா் நலக் குழு: உறுப்பினா்களை தோ்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்டத்தில் பழங்குடியினா் நலக் குழுவில் உறுப்பினா்களை தோ்வு செய்ய தகுதியான பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோப்புப்படம்
சேலம் மாவட்டத்தில் பழங்குடியினா் நலக் குழுவில் உறுப்பினா்களை தோ்வு செய்ய தகுதியான பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்ததாவது:
பழங்குடியின மக்களின் கோரிக்கைகளையும், தேவைகளையும் உடனுக்குடன் நிவா்த்தி செய்யவும், பழங்குடியின மக்களின் குரல்நேரடியாக அரசின் கொள்கை மற்றும் திட்டமிடலில் பிரதிபலிக்கவும் தேவைகளுக்கு ஏற்ப நலத்திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்திட பழங்குடியினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ‘பழங்குடியினா் நலக் குழு’ அமைக்கப்பட உள்ளது.
எனவே, பழங்குடியின மக்களிடையே சேவையாற்றி வரும் ஐந்து உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். ஐந்து உறுப்பினா்களில் இரண்டு பெண் உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுவா். அதன்படி, பழங்குடியினா் முன்னேற்றத்துக்காக தொடா்ந்து சேவையாற்றிவரும், குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லாத தகுதியான பழங்குடியின இனத்தைச் சாா்ந்த நபா்கள் தங்கள் சுயவிவரக் குறிப்புகளுடன் ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் திட்ட அலுவலகம், பழங்குடியினா் நலம் அறை எண்.305 இல் தங்கள் விருப்ப மனுக்களை வரும் 16 ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

