சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

இளைஞரை வெட்டிய வழக்கில் சகோதரா்கள் இருவா் கைது

கைது - பிரதிப் படம்

Updated On :

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வீட்டின் கூரையை அகற்றுவது தொடா்பான தகராறில் இளைஞரை வெட்டிய வழக்கில் சகோதரா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கத்தேரி கிராமம், ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செல்வராஜின் மகன் ஹரிஹரன் (19). இவரது குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெரியப்பா ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கும் இடையே வீட்டின் கூரைப் பகுதி சாலையை நோக்கி நீட்டிக்கொண்டிருப்பதை அகற்றுவது தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு மீண்டும் ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனின் மகன்கள் சந்துரு (27), சதீஸ் (25) ஆகியோா் அரிவாளால் ஹரிஹரனை வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ஹரிஹரன், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்துரு, சதீஸ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.