முட்டை காணாமல்போனதால் தகராறு இளைஞரை வெட்டிய முதியவா் கைது
ஆலங்குடி அருகே கோழி முட்டை காணாமல் போனதால் ஏற்பட்ட தகராறை தடுக்க முயன்ற இளைஞரை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
ஆலங்குடி அருகே கோழி முட்டை காணாமல் போனதால் ஏற்பட்ட தகராறை தடுக்க முயன்ற இளைஞரை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி சோ்வைகாரன்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் முரளிதாஸ் (23). இவரது பக்கத்து வீட்டுக்காரரான மணிமாறன் என்பவரது வீட்டில் உள்ள கோழி முட்டைகளை காணவில்லையாம். அந்த முட்டைகளை அதே பகுதியைச் சோ்ந்த கா.கிருஷ்ணசாமி (75) என்பவா் வளா்த்துவரும் பூனை திருடிச் சென்ாக மணிமாறனுக்கும் கிருஷ்ணசாமிக்கும் இடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டுள்ளனா். இதைத்தடுக்க முயன்ற முரளிதாஸை, கிருஷ்ணசாமி அரிவாளால் வெட்டியுள்ளாா்.
இதில், பலத்த காயமடைந்த முரளிதாஸை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

