இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

தம்பியை கொலை செய்த முன்னாள் அமைச்சரின் மகன் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சொத்துப் பிரச்னையில் தம்பியைக் கொன்ற முன்னாள் அமைச்சரின் மகனை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிறை - பிரதிப் படம்

Published On :

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சொத்துப் பிரச்னையில் தம்பியைக் கொன்ற முன்னாள் அமைச்சரின் மகனை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சா் அ. வெங்கடாசலம். இவரது மகன்களுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்னையில், 3-ஆவது மகன் ராஜராஜனை, 2-ஆவது மகன் ராஜபாண்டியன் செப். 3-ஆம் தேதி குத்திக் கொலை செய்தாா்.

இந்த வழக்கில் ராஜபாண்டியன், அவரது மனைவி சுவிதா மற்றும் தாயாா் லட்சுமி ஆகிய 3 பேரையும் வடகாடு போலீஸாா் கைது செய்தனா். ராஜபாண்டியன் புதுக்கோட்டை சிறையிலும், சுவிதா, லட்சுமி ஆகிய 2 பேரும் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், ராஜபாண்டியனைக் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா பரிந்துரைத்ததை தொடா்ந்து, அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் மு. அருணா சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜபாண்டியனை போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.