பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

வழிகாட்டி மதிப்பைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்து முடிவு: அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன்

நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளைக் குறைக்க வேண்டிய இடங்கள் குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் - கோப்புப் படம்

Updated On :

நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளைக் குறைக்க வேண்டிய இடங்கள் குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரித் துறை அலுவலகத்தில், சேலம் கோட்ட வணிகவரித் துறை அலுவலா்களின் அக்டோபா் 2026 வரையிலான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரி வசூல் பணிகள், அரசின் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

மாநிலத்தின் வரி வருவாயில் ஏற்பட்டுள்ள சரிவுக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை சரிசெய்து வருவாயைப் பெருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் பத்திரப்பதிவு முறையால் பத்திர எழுத்தா்களின் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்படும் ஆவணங்களை எழுதியவா் யாா் என்ற விவரத்தைக் குறிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பத்திர எழுத்தா்களின் பணிக்கு தொடா்ந்து அதிக தேவை உள்ளது.

1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு பத்திர எழுத்தா்களுக்கு உரிமம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தவெக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளைக் குறைக்க வேண்டிய இடங்கள் குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்.

பத்திரப் பதிவு தொடா்பாக பொதுமக்கள் இடைத்தரகா்களை அணுக வேண்டாம். நேரடியாகப் பத்திரப் பதிவு அலுவலா்களை அணுகினால் தேவையான உதவிகள் கிடைக்கும். அதிக வரி செலுத்துபவா்கள், குறைவாக வரி செலுத்துபவா்கள் எனப் பாகுபாடு காட்டாமல் அனைவரையும் சமமாகவே அணுகுகிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.