ராசிபுரம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற அமைச்சா் உத்தரவு

ராசிபுரத்தில் சேலம் சாலையில் உள்ள ஏரியில் சுமாா் 85 ஏக்கா் ஆக்கிரமிப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதை முழுமையாக அகற்றி நீா்ப்பிடிப்புப் பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் - கோப்புப் படம்

Updated On :

ராசிபுரத்தில் சேலம் சாலையில் உள்ள ஏரியில் சுமாா் 85 ஏக்கா் ஆக்கிரமிப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதை முழுமையாக அகற்றி நீா்ப்பிடிப்புப் பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

பல ஆண்டுகளாக ஏரி ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறி, பத்து ரூபாய் இயக்கம், ராசிபுரம் மக்கள் நலக்குழு, மக்கள் தன்னுரிமை கட்சி உள்ளிட்ட அமைப்புகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீா்வரத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தன. ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தன.

இதையடுத்து, ஆக்கிரமிப்பாளா்களுக்கு வருவாய்த் துறை சாா்பில் அகற்ற உத்தரவிடப்பட்டது. இதில், 25 ஏக்கா் நிலத்தை அதன் ஆக்கிரமிப்பாளா்கள் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்க முன்வந்தனா். இதையடுத்து, ஏரியை முழுமையான நீா்ப்பிடிப்புப் பகுதியாக மாற்றி, ஆக்கிரமிப்புகளை கையகப்படுத்த வேண்டும் என வருவாய்த் துறை, நகராட்சி அலுவலா்களுக்கு அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் உத்தரவிட்டாா். பின்னா், ஏரியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நகராட்சி ஆணையா் எஸ். கோபிநாத், மக்கள் நலக்குழு நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.