முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

எடப்பாடி அருகே கூரை வீட்டில் தீ விபத்து: நகை, பணம் எரிந்து சேதம்

எடப்பாடி அருகே கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தங்க நகை, ரொக்கம் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தது.

தீ - பிரதிப் படம்

Updated On :

எடப்பாடி அருகே கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தங்க நகை, ரொக்கம் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தது.

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத்திற்குள்பட்ட, சித்தூா் செட்டிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (70). இவா் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் கூரை வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் வீட்டின் கூரையிலிருந்து திடீரென அதிக அளவில் கரும்புகை வெளியேறியதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மாரியம்மாள், வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறி உதவி கேட்டு கூச்சலிட்டாா். இதற்குள் வீட்டின் கூரை தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீயின் தாக்கம் அதிகரித்து கூரை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினா் கூரை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள், ரொக்கம் ரூ. 2 ஆயிரம், 4 கிராம் தங்க நகை, நிலப் பத்திரம், குடும்ப அட்டை உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.

மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சம்பவ இடத்தில் பூலாம்பட்டி போலீஸாா் ஆய்வு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.