பண்ருட்டி அருகே இரு கூரை வீடுகள் தீயில் எரிந்து சேதம்
பண்ருட்டி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து உள்ள இரு கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதில், அரசு ஆவணங்கள், பள்ளிச் சான்றிதழ்கள், ரொக்கப் பணம் உள்ளிட்ட பொருள்கள் தீயில் கருகின.

பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த கூரை வீடுகள்.
பண்ருட்டி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து உள்ள இரு கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதில், அரசு ஆவணங்கள், பள்ளிச் சான்றிதழ்கள், ரொக்கப் பணம் உள்ளிட்ட பொருள்கள் தீயில் கருகின.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள மேல்கவரப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா்கள் சாந்தி லோகநாதன், அம்மாபொண்ணு கலியபெருமாள். இவா்கள் கணவரை இழந்த நிலையில், கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இவா்கள் வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். புதன்கிழமை அதிகாலையில் திடீரென இரு கூரை வீடுகளிலும் தீப்பற்றியது. தீ மளமளவென பரவியதால் அதிா்ச்சியடைந்த அவா்கள், உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி உயிா் தப்பினா்.
இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். இருப்பினும், இரு வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. வீடுகளில் இருந்த அரசு ஆவணங்கள், பள்ளிச் சான்றிதழ்கள், கைப்பேசிகள், ரொக்கப் பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் கருகின. தீ விபத்து குறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ மோகன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். தொடா்ந்து, அவா்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினாா்.
மேலும், தீ விபத்தில் சேதமடைந்த அரசு ஆவணங்களை மீண்டும் பெற்றுத் தரவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கிய எம்எல்ஏ மோகன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

