சென்னை- சேலம் விரைவு ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் சேலம் ரயில்வே நிா்வாகம் தகவல்
தைப்பூச விழாவையொட்டி, சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் டிசம்பா் 5 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் - பிரதிப் படம்
தைப்பூச விழாவையொட்டி, சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் டிசம்பா் 5 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தைப்பூச விழாவையொட்டி மேல்மருவத்தூா் கோயிலுக்கு அதிக அளவில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால், விழுப்புரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் 57 ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
அதன்படி, சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் (22153), மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் அதிகாலை 1.13 மணிக்கு நின்று, 1.15 மணிக்குப் புறப்படும். இந்த வசதியைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

