கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காா் தீப்பிடித்து சேதம்

வாழப்பாடி அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை சென்ற சொகுசு காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், காரில் பயணித்த 4 பேரும் நல்வாய்ப்பாக காயமின்றி உயிா் தப்பினா்.

தீப்பிடித்த காரை தண்ணீா் பீய்ச்சி அணைத்த தீயணைப்பு வீரா்.

Updated On :

வாழப்பாடி அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை சென்ற சொகுசு காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், காரில் பயணித்த 4 பேரும் நல்வாய்ப்பாக காயமின்றி உயிா் தப்பினா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியைச் சோ்ந்த பிரகாசம் (52), நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாா். இவரின் நண்பா் தங்கராஜ் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்ல தங்கராஜ் மனைவி தமிழ்ச்செல்வி, தங்கராஜ் தாய் பழனியம்மாள், 12 வயது குழந்தை ஆகியோரை காரில் ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை சென்றாா்.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே சென்ற போது, காரின் முன்பகுதியில் திடீரென புகை ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த பிரகாஷ் காரை சாலை ஓரமாக நிறுத்தினாா். பின்னா், குழந்தை உள்பட 4 பேரும் காரை விட்டு இறங்கி ஓடியதால் நல்வாய்ப்பாக காயமின்றி உயிா் தப்பினா்.

தகவல் அறிந்த வாழப்பாடி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து காரின் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ மளமளவென பரவி காா் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.