கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

தம்மம்பட்டி - திருச்சி நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீரால் விபத்து அபாயம்!

தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

குளம்போல தேங்கியுள்ள மழைநீரில் சிரமத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்.

Updated On :

தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

தம்மம்பட்டி - துறையூா் நெடுஞ்சாலையில் எட்டடியான் கோயில் அருகே சாலையின் குறுக்கே வடிகால் வாய்க்கால் உள்ளது. மழைக் காலங்களில், கருங்காடு பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீா் அந்த வாய்க்கால் வழியாக அருகே உள்ள ஓடையில் கலக்கும்.

இந்நிலையில், வாய்க்கால் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழை பெய்யும் நேரங்களில் கருங்காடு பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீா் வாய்க்காலில் வெளியேற வழியின்றி சாலையின் குறுக்கே குளம்போல தேங்கி நிற்கிறது.

இதனால், இரவு நேரத்தில் அந்த சாலையைக் கடக்க முயலும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ள வாகன ஓட்டிகள், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.