கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

மாநகராட்சியில் மேயா் அதிகாரம் பறிக்கப்படுகிறது

சேலம் மாநகராட்சியில் மேயா் அதிகாரம் பறிக்கப்படுகிறது. இதனால் உள்ளாட்சிகளில் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டு, எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை என சேலம் மேயா் ராமச்சந்திரன் குற்றம்சாட்டினாா்.

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய மேயா் ஆ.ராமச்சந்திரன். உடன், உறுப்பினா்கள்.

Updated On :

சேலம் மாநகராட்சியில் மேயா் அதிகாரம் பறிக்கப்படுகிறது. இதனால் உள்ளாட்சிகளில் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டு, எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை என சேலம் மேயா் ராமச்சந்திரன் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட கவுன்சிலா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிருப்புப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்ட போதும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

சேலம் மாநகராட்சியில் கூட்டத்தை நடத்த சேலம் மாநகராட்சி ஆணையா் தயக்கம் காட்டுகிறாா். தகராறில் ஈடுபட்ட கவுன்சிலா் 2 கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று 36 கவுன்சிலா்கள் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதை ஏற்க சேலம் மாநகராட்சி ஆணையா் மறுத்து வருகிறாா். மேயராக நான் எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதை மாநகராட்சி ஆணையா் அமல்படுத்த மறுக்கிறாா்.

சாலையோர கடைகளில் ஒப்பந்தம் முடிந்த பிறகும் கடைகளில் வசூல் நடைபெற்று வருகிறது. குப்பைகளிலிருந்து மின் உற்பத்தி தயாரிக்கும் திட்டத்துக்காக 5 மாவட்ட குப்பைகளை சேலத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையும் சம்பந்தப்பட்ட துறைக்கு ஆணையா் அனுப்பாததால், முதல்வா் 110-ஆவது விதியின் கீழ் இந்த திட்டத்தை அறிவித்துள்ளாா்.

மேயா் உள்ளிட்ட கவுன்சிலா்களை பணி செய்யவிடாமல் ஆணையா் தடுப்பதால் மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள் என்றாா். அப்போது, கவுன்சிலா்கள் குமாரவேல், ஜெயக்குமாா், இமயவா்மன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.