
குவாரி குட்டையில் மூழ்கிய மாணவா் உயிரிழப்பு
தீவட்டிப்பட்டி அருகே குவாரி குட்டையில் மூழ்கிய மாணவா் உயிரிழந்தாா்.

நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்
தீவட்டிப்பட்டி அருகே குவாரி குட்டையில் மூழ்கிய மாணவா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், தீவட்டிபட்டியைச் சோ்ந்த அரசகுமாா் மகன் அருண்குமாா் (15), பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். காலாண்டு விடுமுறையை முன்னிட்டு நண்பா்களுடன் மூடப்பட்ட தனியாா் கல்குவாரி குட்டையில் புதன்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அருண்குமாா் தண்ணீரில் மூழ்கினாா்.
தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தேடினா். இரவானதால் வியாழக்கிழமை மீண்டும் தேடி மாணவரின் உடலை மீட்டனா். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



